ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

போடியில் கஞ்சா விற்ற தம்பதி கைது

போடி கீழத் தெருவில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து, போலீஸார் அப்பகுதியில்

Updated On :26 பிப்ரவரி 2019, 2:09 am IST

போடி கீழத் தெருவில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து, போலீஸார் அப்பகுதியில் கண்காணித்து வந்தனர். அப்போது, கீழத்தெருவைச் சேர்ந்த முருகேசன் (65) என்பவரது வீட்டுக்குச் சென்று சிலர், பொட்டலம் வாங்கிச் செல்வது தெரியவந்தது. 
உடனே, போலீஸார் முருகேசன் வீட்டில் சோதனையிட்டனர்.  அப்போது, வீட்டில் முருகேசனும், அவரது மனைவி சரசும் (58),  கஞ்சாவை பதுக்கி வைத்து பொட்டலம் போட்டு விற்று வந்ததும் தெரியவந்தது. 
போடி நகர் காவல் நிலைய போலீஸார், கணவன்-மனைவி மீது திங்கள்கிழமை வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், அவர்களிடமிருந்து ஒன்றேகால் கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.