ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

முல்லைப் பெரியாறு அணையில் மத்திய துணை கண்காணிப்புக் குழு இன்று ஆய்வு

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில்  மத்திய கண்காணிப்பு துணைக் குழுவினர் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொள்கின்றனர்.

Updated On :26 பிப்ரவரி 2019, 1:37 am IST

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில்  மத்திய கண்காணிப்பு துணைக் குழுவினர் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொள்கின்றனர்.
     முல்லைப் பெரியாறு அணையில் பருவ காலநிலை மாறுபாடுகளின் போது, அணையின் பாதுகாப்பை உறுதி செய்ய உச்ச நீதிமன்றம் கண்காணிப்புக் குழுவை ஏற்படுத்தி, அக்குழுவுக்கு உதவியாக துணைக் கண்காணிப்புக் குழுவையும் அமைத்துள்ளது. இந்த 2 குழுவினரும், அணைப் பகுதிகளை பார்வையிட்டு அறிக்கை சமர்ப்பிப்பர். 
    அதன்படி, அணைப் பகுதிகளில் மத்திய கண்காணிப்பு துணைக் குழுவினர்,  செவ்வாய்க்கிழமை ஆய்வு நடத்துகின்றனர். இதில், துணைக் குழுவின் தலைவரான மத்திய நீர்வள ஆணையச் செயற்பொறியாளர் சரவணபிரபு, தமிழக அரசின் பிரதிநிதிகள் செயற்பொறியாளர் விஜிபிரபு, உதவிச் செயற்பொறியாளர் சாம் இர்வின் மற்றும் கேரள அரசின் பிரதிநிதிகளான அம் மாநில நீர்ப்பாசனத் துறை செயற்பொறியாளர் கிரிஜாபாய், உதவிப் பொறியாளர் பிரசீத் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
அணை நிலவரம்: முல்லைப் பெரியாறு அணையில் திங்கள்கிழமை நிலவரப்படி, நீர்மட்டம்- 115.05 அடியாகவும், நீர் இருப்பு-1,736 மில்லியன் கன அடியாகவும் இருந்தது. நீர்ப் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததாலும், நீர் வரத்து இல்லாததாலும் அணைக்கு நீர்வரத்து இல்லை. அணையிலிருந்து விநாடிக்கு 230 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.