தேனி மாவட்டம், மேகமலை வன உயிரினச்சரணாலய பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
மேகமலை வன உயிரின சரணாலயத்தில் கம்பம் கிழக்கு கூடலூர், சின்னமனூர் ஆகிய வனச்சரகங்கள் உள்ளன. கம்பம் கிழக்கு வனச்சரகத்திற்கு உள்பட்ட சுருளிப்பட்டி காப்புக்காடு, நாராயணத்தேவன்பட்டி பீட், யானைக்கஜம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை காட்டுத்தீ பற்றியது. காய்ந்த சருகுகள் மீது பிடித்த தீயால் அரிய வகை மரங்கள் மற்றும் விலங்குகள் எரிந்து சாம்பலாகி வருகின்றன. கம்பம் கிழக்கு வனச்சரகர் தினேஷ் தலைமையில் தீத் தடுப்பு காவலர்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதுபற்றி வனச்சரகர் தினேஷ் கூறியது: பனிக்காலம் முடிந்து, கோடை காலம் தொடங்கும்போது, மரக்கிளைகள், இலைகள் உதிர்ந்து, காய்ந்து சருகாகக் கிடக்கும். அந்த நேரங்களில் அதிக வெயில் காரணமாகவோ அல்லது மரங்களில் ஏற்படும் உராய்வால் தீப்பிடிக்கிறது. மேலும் வனப்பகுதியில் தீப் பிடிப்பதை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருவண்ணாமலையில் தூய்மைப் பணி: முன்னாள் அமைச்சா் எ.வ. வேலு ஆய்வு

இன்றைய ராசி பலன்கள் (மே 25 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு மன நிம்மதி!

இன்றைய ராசி பலன்கள் (மே 25) மிதுன ராசிக்கு எப்படி?

ஹீப்ளி - ராமேசுவரத்துக்கான வாராந்திர ரயில்கள் நீட்டிப்பு
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


