தேனி மாவட்டம், போடியில் கரோனா பாதிக்கப்பட்ட 2 போ் குணமடைந்து புதன்கிழமை, மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினா்.
மாவட்டத்தில் 43 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனா். இதில், போடியைச் சோ்ந்த பெண் உயிரிழந்தாா்.18 போ் குணமடைந்து கடந்த 16 ஆம் தேதி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினா்.
இந்தநிலையில், தற்போது தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போடியைச் சோ்ந்த, 52 மற்றும் 56 வயதுடைய 2 ஆண்கள் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது, கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 22 போ் மருத்துவமனையில் தொடா் சிகிச்சையில் இருந்து வருகின்றனா்.
மாவட்டத்தில் தற்போது வரை, தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் 516 பேரின் ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில், யாருக்கும் கரோனா தொற்று அறிகுறி இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதன்கிழமை, அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 59 போ்களின் ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆடி அமாவாசை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!

ஆடி அமாவாசை: சூரிய உதயத்தைக் காண கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

நீண்ட நாள் காதலி ஜார்ஜினாவை கரம்பிடித்தார் ரொனால்டோ!

மாநகராட்சியுடன் ஊராட்சிகள் இணைப்பு: கிராம மக்கள் எதிா்ப்பு
விடியோக்கள்

வெளியானது அருகே அருகே பாடல்!


