6 மாதங்களுக்கு பிறகு லோயர் கேம்ப்பில் மின்சார உற்பத்தி தொடக்கம்
தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பில் மின்சார உற்பத்தி 6 மாதங்களுக்கு பிறகு சனிக்கிழமை தொடங்கியது.


தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பில் மின்சார உற்பத்தி 6 மாதங்களுக்கு பிறகு சனிக்கிழமை தொடங்கியது.
தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் பெரியாறு மின்சார உற்பத்தி நிலையம் உள்ளது.
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் லோயர் கேம்ப் வழியாக கொண்டு வரப்பட்டு, மின்சார உற்பத்தி நடைபெறும்.
கடந்த பிப்ரவரி 10ல் மின்சார உற்பத்தி அணையிலிருந்து தண்ணீர் வரத்து குறைவால் நிறுத்தப்பட்டது.
தற்போது சனிக்கிழைமை முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தமிழக பகுதிக்கு விநாடிக்கு, 300 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இதனால் உற்பத்தி நிலையத்தில் உள்ள நான்கு மின்னாக்கிகளில் மூன்றாவது மின்னாக்கியில் உற்பத்தியை மின்சார வாரியத்தினர் தொடங்கி உள்ளனர்.
22 மெகாவாட் மின்சாரம் சனிக்கிழமை முதல் உற்பத்தி தொடங்கியது.
அணையின் நீர்மட்டம் விவரம்
முல்லைப் பெரியாறு அணையில் சனிக்கிழைமை நிலவரப்படி 115.25 அடி உயரமாகவும், நீர் இருப்பு 1,772 மில்லியன் கன அடியாகவும், அணைக்குள் நீர் வரத்து விநாடிக்கு 438 கன அடியாகவும், வெளிேற்றம் 300 கன அடியாகவும் இருந்தது,
பெரியாறு அணைப்பகுதியில் 13.4 மில்லி மீட்டர் மழையும், தேக்கடி ஏரியில் 7.8 மி.மீ., மழையும் பெய்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...