தொடர் மழை: போடிமெட்டு மலைச்சாலையில் வாகனப் போக்குவரத்துக்குத் தடை
போடியில் தொடர் மழையின் காரணமாக போடிமெட்டு மலைச்சாலையில் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.


போடியில் தொடர் மழையின் காரணமாக போடிமெட்டு மலைச்சாலையில் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் கன மழை பெய்து வருகிறது. போடி பகுதியில் கடந்த ஒரு வார காலமாகவே தொடர்ந்து சாரல் மழையும், கன மழையும் விட்டு விட்டு பெய்து வருகிறது. போடி மலை கிராமங்களான போடிமெட்டு, குரங்கணி, டாப்ஸ்டேசன் உள்ளிட்ட மலை கிராமங்களில் சூறைக்காற்றுடன் கன மழை பெய்து வருகிறது. இதனால் போடிமெட்டு மலைச்சாலையில் பல இடங்களில் மரங்கள் சாய்ந்து காணப்படுகிறது.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்திலும் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் போடிமெட்டு மலைச்சாலையில் மண் மற்றும் பாறை சரிவுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதனையடுத்து போடிமெட்டு மலைச்சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காவல்துறை சார்பில் கூறுகையில், காற்று பலமாக வீசுவதால் மரங்கள் சாய்ந்து வருகின்றன.
மலைச்சாலையில் மண் சரிவும் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் போடி முந்தலிலிருந்து போடிமெட்டு செல்லும் மலைச்சாலையிலும், முந்தலிலிருந்து குரங்கணி செல்லும் மலைச்சாலையிலும் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படுகிறது. அத்தியாவசிய பொருட்கள் செல்லும் வாகனங்கள், அவசர கால வாகனங்கள், விவசாயிகளின் இரு சக்கர வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...