நீர்வரத்து அதிகரிப்பு: வைகை அணை நீர்மட்டம் 35.04 அடியாக உயர்வு
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் வைகை அணையின் நீர்மட்டம் 35.04 அடியாக உயர்ந்துள்ளது.


முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் வைகை அணையின் நீர்மட்டம் 35.04 அடியாக உயர்ந்துள்ளது.
கடந்த 2 தினங்களில் அணையின் நீர்மட்டம் 5 அடி உயர்ந்ததால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேனி மாவட்டத்தில் பரவலாக தென்மேற்கு பருவ மழை பெய்து வரும் நிலையில், மூலவைகை ஆறு, கொட்டக்குடி ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் நீர்வரத்து வரத் தொடங்கியுள்ளது. கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் முல்லைப்பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதிகளிலும் பலத்த மழை பெய்ததால் அந்த அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
இதன்காரணமாக முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தேனி மாவட்டத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக நீர்வரத்து இல்லாமல் இருந்து வந்த வைகை அணைக்கு தற்போது நீர்வரத்து வரத் தொடங்கியுள்ளது. தற்போது வினாடிக்கு 1571 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், வைகை அணை நீர்மட்டம் கடந்த இரண்டு தினங்களில் 5 அடி உயர்ந்துள்ளது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணை நீர்மட்டம் கடந்த புதன்கிழமை 30 அடியாக இருந்தது. இந்நிலையில் தொடர் நீர்வரத்து காரணமாக 35.04 அடியாக உயர்ந்துள்ளது.
தற்போது அணையிலிருந்து மதுரை மாநகரம் , சேடபட்டி, வத்தலக்குண்டு, தேனி, ஆண்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கான கூட்டுகுடிநீர் திட்டங்களுக்கு மட்டும் 72 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேலும் மூலவைகை ஆறு நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக ஆற்றில் நீர்வரத்து உள்ளது. அந்த தண்ணீரும் 2 தினங்களில் வைகை அணையை வந்து சேரும் என்பதால் வைகை அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் வாய்ப்புள்ளது. இதன்காரணமாக வைகை அணை நீர்மட்டம் வேகமாக உயரும் என்பதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...