4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சின்னமனூரில் தற்கொலை: நீதி கேட்டு உறவினர்கள் போராட்டம்

சின்னமனூர் அரசு மருத்துவமனையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டவரின் இறப்பிற்கு உரிய நீதி கிடைக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களுடன்  காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

News image
போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள்
Updated On :24 ஆகஸ்ட் 2020, 10:14 am

DIN

சின்னமனூர் அரசு மருத்துவமனையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டவரின் இறப்பிற்கு உரிய நீதி கிடைக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களுடன்  காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

தேனி மாவட்டம் சின்னமனூர் காந்திநகர் காலனியைச் சேர்ந்த பெருமாள். தரகு வேலை செய்யும் இவரது மனைவி முருகேஸ்வரி ஓடைப்பட்டி  அங்கன்வாடி மையத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஓடைப்பட்டி அருகேயுள்ள சுக்காங்கல்பட்டியில் மாடுகளுக்கு தீவனமாக பயன்படுத்த வைக்கப்பட்டிருந்த 200 கிலோ ஊட்டச்சத்து மாவை உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு காவலர்கள் பறிமுதல் செய்தனர்.

இது சம்பந்தமாக மாவட்ட குழந்தைகள் நல இயக்குனர் மூலமாக அங்கன்வாடி கண்காணிப்பாளர் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மூலமாக விசாரணை மேற்கொண்டார். அதில் சின்னமனூரைச் சேர்ந்த முருகேஸ்வரி ஊட்டச்சத்து மாவுகளை விற்பனை செய்திருப்பதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து அவர்மீது நடவடிக்கை எடுப்பதாக தகவல் வெளியானது.

இதனையடுத்து மனமுடைந்த முருகேஸ்வரி அவரது கணவர் பெருமாள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இதில் கணவர் பரிதாபமாக இறந்தார்.

இந்நிலையில் திங்கள்கிழமை பிரேத பரிசோதனை செய்ய கூடாது எனவும் அவர்களின் இரு குழந்தைகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக சின்னமனூர் ஆய்வாளர் ஜெயசந்திரன் தலைமையிலான காவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன்  பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.