4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சின்னமனூர் அருகே முல்லைப் பெரியாறு தண்ணீர் கடத்தல்: பொதுமக்கள் சாலை மறியல்

சின்னமனூர் அருகே சீலையம்பட்டியில் முல்லைப் பெரியாற்றின் நீரை ஆழ்துளைக்கிணறு மூலமாக கடத்தி செல்வதை தடுத்து நிறுத்த வேண்டுமென கூறி அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல் மேற்கொண்டு வருகின்றனர். 

News image
சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
Updated On :27 ஆகஸ்ட் 2020, 2:18 pm

DIN

தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே சீலையம்பட்டியில் முல்லைப் பெரியாற்றின் நீரை ஆழ்துளைக்கிணறு மூலமாக கடத்தி செல்வதை தடுத்து நிறுத்த வேண்டுமென கூறி அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல் மேற்கொண்டு வருகின்றனர். 

சீலையம்பட்டி பகுதியில் செல்லும் முல்லைப் பெரியாற்றின் கரையோரங்களில் ஆழ்துளை கிணறு அமைத்து அருகேயுள்ள காமாட்சிபுரம், சீப்பாலக்கோட்டை போன்ற 10க்கும் மேற்பட்ட கிராம பகுதிக்கு தண்ணீரை கொண்டு செல்கின்றனர். இவ்வாறு கொண்டு செல்லப்படும் தண்ணீரை பல லட்சத்திற்கும் விற்பனை  செய்து கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர்.

இவ்வாறு 15க்கும் மேற்பட்ட இடங்களில் தண்ணீரை கடத்தி செல்வதால் சீலையம்பட்டி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதி விவசாயிகள் ஆழ்துளை கிணறு மூலமாக கடத்திச் செல்லப்படும் தண்ணீரை தடுத்து நிறுத்த வேண்டும் என ஊர் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சாலை மறியல் செய்து வருகின்றனர்.

சின்னமனூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்து வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.