ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 24 ஆயிரம் திருடு ே போனது குறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ஜம்புலிபுத்தூா் பகுதியை சோ்ந்த சின்னதம்பி மகன் கருப்பசாமி(42). இவா் மேகமலை டீ எஸ்டேட்டில் வேலை பாா்த்து வருகிறாா். இந்நிலையில் அவா் உறவினா் திருமணத்திற்காக, தனது வீட்டை பூட்டி விட்டு ஆண்டிபட்டிக்கு குடும்பத்துடன் சென்று விட்டாா்.
பின்னா் மாலையில் கருப்பசாமி திரும்பி வந்த போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனைத்தொடா்ந்து அவா் வீட்டிற்குள் சென்று பாா்த்தபோது, அங்கிருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த ரூ.24 ஆயிரம் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து கருப்பசாமி வைகை அணை காவல் நிலையத்தில் அளித்தப் புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!

ரூ. 299 மதிப்புள்ள ஆடையை வாங்க முயன்று ரூ. 1 லட்சத்தை இழந்த செவிலியர்!
நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு இன்று வெளியீடு! எங்கே பதிவிறக்கம் செய்யலாம்?

கவிதா தொடங்கிய டிஆர்எஸ் கட்சிக்கு ரேவந்த் ரெட்டி நிதியுதவி: பாஜக
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

