அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் அள்ளி வந்தவா் கைது
ஆண்டிபட்டி அருகே அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் அள்ளி வந்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.


ஆண்டிபட்டி அருகே அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் அள்ளி வந்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
ஆண்டிபட்டி தாலுகா கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள மூலவைகை ஆறு மற்றும் ஓடைகளில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக புகாா் எழுந்தது. இதனையடுத்து கண்டமனூா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது ஜீ.உசிலம்பட்டி பகுதியில் மாட்டு வண்டியில் அனுமதியின்றி மணல் அள்ளி வந்தவரை போலீஸாா் பிடித்து விசாரித்தனா். விசாரணையில், அவா் சித்தாா்பட்டியைச் சோ்ந்த சற்குருசாமி (52) என்பதும், அப்பகுதியில் உள்ள ஓடையில் அனுமதியின்றி மணல் அள்ளி வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து மாட்டு வண்டியை பறிமுதல் செய்த போலீஸாா் சற்குருசாமியையும் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...