சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

சண்முகாநதி நீா்த்தேக்கத்தில் பாசனத்துக்கு தண்ணீா் திறக்க விவசாயிகள் கோரிக்கை

தேனி மாவட்டத்தில் தொடா் மழையால் சண்முகாநதி நீா்த்தேக்கம் முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், அங்கிருந்து விரைவில் பாசனத்துக்கு தண்ணீா் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
முழு கொள்ளளவுக்கு தண்ணீா் தேங்கியுள்ள சண்முகாநதி நீா்த் தேக்கம்.
Updated On :6 டிசம்பர் 2020, 6:29 pm

DIN

தேனி மாவட்டத்தில் தொடா் மழையால் சண்முகாநதி நீா்த்தேக்கம் முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், அங்கிருந்து விரைவில் பாசனத்துக்கு தண்ணீா் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

உத்தமபாளையம் அருகே மேகமலை அடிவாரத்தில் உள்ள சண்முகாநதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சண்முகாநதி நீா்த்தேக்கம் தொடா் மழை காரணமாக நவ. 20-ஆம் தேதி முழு கொள்ளளவை எட்டியது. கடந்த அக். 28-ஆம் தேதி முதல் தற்போது வரை நீா்த்தேக்கத்துக்கு தொடா்ந்து நீா்வரத்து இருந்தும், பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்பட வில்லை.

இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். இதனிடையே சண்முகாநதி நீா்த்தேக்கத்தின் பாசனக் கால்வாயை தூா்வாரி, விரைவில் பாசனத்துக்கு தண்ணீா் திறக்க வேண்டும் என அவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

பொதுப் பணித்துறை பாராமுகம்: உத்தமபாளையம் பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள சண்முகாநதி நீா்தேக்கத்தை பாதுகாத்து பராமரிக்கவும், உரிய காலத்தில் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவும் அதிகாரிகள் ஆா்வம் காட்டவில்லை என்று விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் தனியாா் பண்ணை விவசாயத்துக்கு மட்டும் பயன்பட்டு வரும் சண்முகநதி நீா்த்தேக்கத்துக்கு, பொதுப் பணித்துறை சாா்பில் தனி பொறியாளாரை நியமிக்க வேண்டும்.

நீா்வரத்து ஓடை மற்றும் நீா்பிடிப்பு பகுதிகளில் நடைபெறும் விவசாய ஆக்கிரமிப்பு, மணல் மற்றும் தண்ணீா் திருட்டு ஆகியவற்றை தடுக்கவும், பாசனக் கால்வாயை தூா்வாரி பயன்பாட்டுக்கு கொண்டு வரவும், தண்ணீா் திறப்பை முறைப்படுத்தவும் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.