சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

உள்ளாட்சித் தேர்தல்: எல்லைப்பகுதியில் கேரள காவல்துறையினர் தீவிர சோதனை

தேனி மாவட்டம், தமிழக - கேரள எல்லைப் பகுதியில் இரட்டை வாக்காளர் ஓட்டுக்களை தவிர்ப்பதற்காக காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

News image
தமிழக - கேரள எல்லைப் பகுதியில் சோதனையில் ஈடுபட்டுள்ள கேரள காவல்துறையினர்.
Updated On :6 டிசம்பர் 2020, 1:49 pm

DIN

தேனி மாவட்டம், தமிழக - கேரள எல்லைப் பகுதியில் இரட்டை வாக்காளர் ஓட்டுக்களை தவிர்ப்பதற்காக காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேனி மாவட்டத்தின் அருகில் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் உள்ளது. இங்கு, டிசம்பர் 8 ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தோட்டத்தொழிலாளர்களும் அங்கு தங்கி உள்ளார்கள். 
இவர்களுக்கும் அங்கு வாக்குரிமை உள்ளது.

அதே நேரத்தில் தமிழக, தேனி மாவட்டத்தில் வாக்குரிமை இருந்தது. இரண்டு வாக்காளர் முறையை தவிர்க்க இடுக்கி தேனி மாவட்ட ஆட்சியாளர்கள் பேச்சுவார்த்தை செய்து ஒரு ஓட்டு உரிமை மட்டும் வைக்குமாறு அறிவுறுத்தினர். 

அதன்படி, உள்ளாட்சித்தேர்தலை முன்னிட்டு இரட்டை வாக்காளர் முறையை பயன்படுத்தி கள்ள ஓட்டுக்கள் போடுவதை தவிர்க்க எல்லைப்பகுதியான கம்பம் மெட்டு, குமுளி பகுதியில் கேரள காவல்துறையினர் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.  கேரளத்தில் உள்ளாட்சித்தேர்தல் வரும் 8,10 மற்றும் 12 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. 

இதில் இடுக்கி உள்ளிட்ட ஒருசில மாவட்டங்களில் டிச.8 ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. பஞ்சாயத்து தேர்தலை முன்னிட்டு, போலி தொழிலாளர் அட்டை, கூட்டுறவு வங்கி உறுப்பினர் அட்டை மற்ற மாநிலங்களில் உள்ளவர்களின் ஆதார் கார்டு போன்றவைகளின் மூலம் தோட்டப்பகுதிகளில் ஏராளமான கள்ள ஓட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளதாக காங்கிரசார் புகார் தெரிவித்திருந்தனர். 

இதனால் இடுக்கி மாவட்டத்தில் நாளை நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் இரட்டை வாக்காளர் முறையை பயன்படுத்தி கள்ள ஓட்டுக்கள் போட வாக்காளர்கள் வரலாம் என்ற தகவலையடுத்து, ஞாயிற்றுக்கிழமை முதல் எல்லைப்பகுதிகளான கம்பம் மெட்டு, குமுளி பகுதியில் கேரள காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

அங்குள்ள காவல் சோதனைச்சாவடியில் தமிழகத்திலிருந்து கேரளத்துக்குள் செல்லும் வாகனங்களில் செல்லும் நபர்கள், அவர்களது விலாசம், எங்கு செல்கின்றனர் என பதிவு செய்து வாகனங்களை சோதனை செய்து அனுப்புகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.