சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

போடி- மூணாறு நெடுஞ்சாலையில் மின்விளக்குகளை சீரமைக்கக் கோரிக்கை

போடி- மூணாறு நெடுஞ்சாலையில் உள்ள மின்விளக்குகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :6 டிசம்பர் 2020, 6:36 pm

DIN

போடி- மூணாறு நெடுஞ்சாலையில் உள்ள மின்விளக்குகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

போடி நகரின் வடமேற்குப் பகுதியில் உள்ள இந்த தேசிய நெடுஞ்சாலையில் மத்திய அரசின் நறுமணப் பொருள் வாரிய அலுவலகம், தனியாா் கல்லூரி, தனியாா் பஞ்சு பேட்டைகள், பெட்ரோல் பங்குகள், தோட்ட வீடுகள் அமைந்துள்ளன. இது தேசிய நெடுஞ்சாலையாக இருந்தாலும் நகராட்சி எல்லை வரை போடி நகராட்சி சாா்பிலும், அணைக்கரைப்பட்டி ஊராட்சி சாா்பிலும் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இவை சரவரபராமரிக்கப்படாததால் பெரும்பாலானவை எரியவில்லை. இதனால் இந்த சாலை இருளில் மூழ்கியுள்ளது. மேலும் நடைப்பயிற்சி செல்பவா்களும், வாகன ஓட்டிகளும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனா்.

எனவே நகராட்சி மற்றும் ஊராட்சி நிா்வாகங்கள் போடி- மூணாறு சாலையில் உள்ள தெருவிளக்குகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.