பெரியகுளம் அருகே காட்டாற்றில் சிக்கி இளைஞர் பலி
பெரியகுளம் அருகே காட்டாற்றில் சிக்கி இளைஞர் பலியானார்.


பெரியகுளம் அருகே காட்டாற்றில் சிக்கி இளைஞர் பலியானார்.
தேனி மாவட்டம், பெரியகுளத்தைச் சேர்ந்த செல்லராமு (37) மற்றும் அவரது நண்பர்கள் குருகார்த்திக், பாண்டி, ரமேஷ் உள்பட 6 பேர் கல்லாற்றில் குளிக்கச் சென்றுள்ளனர்.
கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்த மழையால் கல்லாற்றில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இந்த வெள்ளத்தில் செல்லராமு உள்பட 6 பேரும் சிக்கிக் கொண்டனர்.
தீயணைப்புத்துறையினர் தகவலறிந்து இரவு சம்பவ இடத்திற்கு சென்று குருகார்த்திக், பாண்டி, ரமேஷ் உள்பட 5 பேரை மீட்டனர்.

செல்லராமுவை தேடி வந்த நிலையில் 12 கி.மீ தூரம் இழுத்து செல்லப்பட்டு மேல்மங்கலம் அருகே முத்தையா கோயில் தடுப்பணையில் உடல் கரை ஒதுங்கியது. உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுபியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...