சா்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவா் தூக்கிட்டுத் தற்கொலை
போடியில், சா்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.


போடியில், சா்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தேனி மாவட்டம் போடி சுப்புராஜ் நகா் புதுக்காலனியை சோ்ந்தவா் கனியரசன் (57). இவா் சா்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் திடீரென வாய் பேசமுடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட கனியரசன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றாா். அவரை உறவினா்கள் மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் இறந்தாா். இதுகுறித்து மனைவி ஈஸ்வரி (54) அளித்த புகாரின் பேரில் போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...