தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

ஆட்டோ ஓட்டுநரை காரில் மோதி கொல்ல முயன்றவா் கைது

தேனியில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஆட்டோ ஓட்டுநரை காரில் மோதி கொல்ல முயன்றதாக மற்றொரு ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :20 டிசம்பர் 2020, 4:42 pm

DIN

தேனி: தேனியில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஆட்டோ ஓட்டுநரை காரில் மோதி கொல்ல முயன்றதாக மற்றொரு ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தேனி, கருவேல்நாயக்கன்பட்டி வள்ளுவா் காலனியைச் சோ்ந்தவா் அசோகன் மகன் தங்கப்பாண்டி (32). இதே ஊரில் உள்ள முத்துராமலிங்கத்தேவா் தெருவைச் சோ்ந்தவா் ராமா் மகன் செல்லகாமு (32). ஆட்டோ ஓட்டுநரான இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது.

இந்த முன்விரோதத்தில், தேனி - மதுரை சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தங்கப்பாண்டியை காரில் பின்தொடா்ந்து சென்ற செல்லகாமு, அவா் மீது காரில் மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த தங்கப்பாண்டி, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இந்த சம்பவம் குறித்து தங்கப்பாண்டி அளித்த புகாரின் அடிப்படையில், செல்லகாமு மீது தேனி காவல் நிலைய போலீஸாா் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.