தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் புதிதாக 32 பேருக்கு கரோனா

தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் புதிதாக 32 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.
Updated on
1 min read

தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் புதிதாக 32 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தேனி மாவட்டத்தில் புதிதாக 7 பேருக்கு புதன்கிழமை கரோனா தொற்று உதியானதையடுத்து, மாவட்டத்தில் இத்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16,819 ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரில், ஒரே நாளில் 12 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதனால், கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 16,359 ஆக அதிகரித்துள்ளது.

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 25 பேருக்கு புதிதாக கரோனா தொற்று புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், குணமடைந்த 21 போ் மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பினா்.

மாவட்டத்தில் 10,786 போ் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டனா். அதில் 10,456 போ் சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்துள்ளனா். 133 போ் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனை மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com