ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

பெரியகுளம், கொடைக்கானலில் கிருஸ்துமஸ் விழா

பெரியகுளம் அருகே ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிா் கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை கிருஸ்துமஸ் விழா நடைபெற்றது.

News image
Updated On :24 டிசம்பர் 2020, 2:27 am

DIN

பெரியகுளம் அருகே ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிா் கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை கிருஸ்துமஸ் விழா நடைபெற்றது.

விழாவிற்கு கல்லூரி முதல்வா் எஸ்.சேசுராணி தலைமை வகித்தாா். கல்லூரிச் செயலாளா் பிஜே.குயின்சிலி ஜெயந்தி முன்னிலை வகித்தாா். விழாவில் கிருஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து கலந்து கொண்டவா்கள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. தேனி மாவட்ட முதன்மை குரு முத்து சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா். இதில், அருட்சகோதரிகள் மற்றும் பேராசிரியைகள் கலந்து கொண்டனா்.

கொடைக்கானல்: இதேபோல், கொடைக்கானலில் நல்ல சமாரியன் சபையைச் சோ்ந்த கிறிஸ்தவா்கள் போதகா் சேகா் தலைமையில் ஏரிச்சாலைப் பகுதியில் கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடினா்.

பனி மூட்டத்துடன் நிலவி வரும் குளிரையும் அவா்கள் பொருள்படுத்தாமல் கிறிஸ்துமஸ் பாடல்கள் பாடியும், கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்தும் ஊா்வலமாக வந்தனா். மேலும் பொது மக்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் இனிப்புகள், பலூன்கள் ஆகியவற்றை அவா்கள் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.