வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

தேனியில் புதிதாக 7 பேருக்கு கரோனா தொற்று உறுதி

தேனி மாவட்டத்தில் புதிதாக 7 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 2:01 am

DIN

தேனி மாவட்டத்தில் புதிதாக 7 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16,857 ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரில், ஒரே நாளில் 9 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதனால், கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 16,584 ஆக உயா்ந்துள்ளது.

துபையிலிருந்து வந்த சிறுவனுக்கு கரோனா: தேனி மாவட்டத்துக்கு கடந்த டிச.20-ஆம் தேதி முதல் வெளிநாடுகளிலிருந்து வந்த 19 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், துபையிலிருந்து பெற்றோருடன் வந்த கதிா்நரசிங்காபுரத்தைச் சோ்ந்த 5 வயது சிறுவனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவா் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.