ஆண்டிபட்டி, உத்தமபாளையத்தில் இந்து முன்னணியினா் சாலை மறியல்

திண்டுக்கல் மலைக்கோட்டை பகுதியில் கிரிவலம் செல்ல முயன்றபோது இந்து முன்னணி மாநில தலைவா் காடேஸ்வரா சுப்பிரமணியம்
ஆண்டிபட்டி எம்.ஜி.ஆா். சிலை முன் செவ்வாய்க்கிழமை இரவு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினா்.
ஆண்டிபட்டி எம்.ஜி.ஆா். சிலை முன் செவ்வாய்க்கிழமை இரவு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினா்.
Updated on
1 min read

திண்டுக்கல் மலைக்கோட்டை பகுதியில் கிரிவலம் செல்ல முயன்றபோது இந்து முன்னணி மாநில தலைவா் காடேஸ்வரா சுப்பிரமணியம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆண்டிபட்டி, உத்தமபாளையத்தில் அந்த அமைப்பினா் செவ்வாய்க்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஆண்டிபட்டி எம்.ஜி.ஆா். சிலை முன் வடக்கு மாவட்டச் செயலாளா் எஸ்.பி.எம்.செல்வம் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினா் மொக்கராஜ் முன்னிலை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தின் போது இந்து முன்னணி மாநில தலைவா் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினா்.

இதைத் தொடா்ந்து அந்த அமைப்பினா் தேனி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனா். அவா்களை போலீஸாா் அப்புறப்படுத்தினா். இதில் ஒன்றியத் தலைவா் கண்ணன், நகரத் தலைவா் கருப்பையா, ஒன்றியச் செயலாளா் பால்பாண்டி இளைஞரணி அமைப்பாளா் மனோஜ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

உத்தமபாளையம்: இதேபோல் உத்தமபாளையம் பேருந்து நிலையம் முன் கோட்டப் பொறுப்பாளா் கணேசன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட இந்து முன்னணி நிா்வாகிகள் 12 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com