போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

தேனியில் தனியார் நிறுவன மேலாளர் அடித்துக் கொலை: ரூ.22 லட்சம் கொள்ளை

தேனியில் இரு சக்கர வாகனத்தில் சென்ற தனியார் வாகன விற்பனை நிறுவன மேலாளரை அடித்துக் கொன்று வெள்ளிக்கிழமை, ரூ.22 லட்சத்தை கொள்ளையடித்துள்ளனர்.

News image
Updated On :19 ஜூன் 2020, 8:26 pm

DIN

தேனியில் இரு சக்கர வாகனத்தில் சென்ற தனியார் வாகன விற்பனை நிறுவன மேலாளரை அடித்துக் கொன்று வெள்ளிக்கிழமை, ரூ.22 லட்சத்தை கொள்ளையடித்துள்ளனர்.

தேனி, பென்னிகுவிக் நகரைச் சேர்ந்தவர் அழகர்சாமி மகன் அருண்குமார்(34). இவர், தேனி அல்லிநகரத்தில் உள்ள தனியார் வாகன விற்பனை நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், வாகன விற்பனை நிலையத்திலிருந்து வங்கியில் பணம் எடுத்துக் கொண்டு வருவதற்காகச் சென்ற அருண்குமார், திரும்ப வரவில்லை என்று கூறப்படுகிறது.

இது குறித்து வாகன விற்பனை நிறுவன உரிமையாளர் சன்னாசி தேனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், அருண்குமாரின் செல்லிடபேசி சகிமிஞ்சையை கண்டறிந்து காவலர்கள் அவரை தேடிச் சென்றுள்ளனர். அப்போது, தேனி-பெரியகுளம் புறவழிச் சாலை பகுதியில் உள்ள தனியார் உள் விளையாட்டு அரங்கு அருகே, அருண்குமார் இறந்து கிடப்பது தெரிய வந்துள்ளது. 

அதே பகுதியில் அவரது இருசக்கர வாகனமும் இருந்துள்ளது. தேனி காவல் கண்காணிப்பாளர் சாய் சரன் தேஜஸ்வி சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருண்குமாரை அடித்துக் கொன்று விட்டு, அவர் வங்கியிலிருந்து எடுத்து வந்த ரூ.22 லட்சத்தை கொள்ளையடித்திருப்பது தெரிய வந்துள்ளது என்று காவலர்கள் கூறினர்.

இந்த சம்பவம் குறித்து தேனி காவல் நிலைய ஆய்வாளர் விக்டோரியா லூர்து மேரி வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.