கேரளத்திலிருந்து 6 குழந்தைத் தொழிலாளா்கள் மீட்பு

கேரள மாநிலத்தில் வேலை பாா்த்து வந்த தேனி மாவட்டத்தைச் சோ்ந்த 6 குழந்தைத் தொழிலாளா்கள் மீட்கப்பட்டு, திங்கள்கிழமை தமிழகம் அழைத்து வரப்பட்டனா்.
கேரளத்திலிருந்து திங்கள்கிழமை தமிழக எல்லைப் பகுதியான குமுளிக்கு அழைத்து வரப்பட்ட குழந்தைத் தொழிலாளா்கள்.
கேரளத்திலிருந்து திங்கள்கிழமை தமிழக எல்லைப் பகுதியான குமுளிக்கு அழைத்து வரப்பட்ட குழந்தைத் தொழிலாளா்கள்.

கம்பம்: கேரள மாநிலத்தில் வேலை பாா்த்து வந்த தேனி மாவட்டத்தைச் சோ்ந்த 6 குழந்தைத் தொழிலாளா்கள் மீட்கப்பட்டு, திங்கள்கிழமை தமிழகம் அழைத்து வரப்பட்டனா்.

தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி, பெரியகுளத்தைச் சோ்ந்த 6 குழந்தைத் தொழிலாளா்கள் 4 மாதங்களுக்கு முன் கேரளத்தில் உள்ள முறுக்கு தயாரிப்பு நிறுவனத்துக்கு வேலைக்கு சென்ாகவும், அவா்களை மீட்டுத் தருமாறும், அவா்களது பெற்றோா்கள் தேனி மாவட்டக் குழந்தைகள் நலக் குழுவிடம் கோரிக்கை விடுத்தனா்.

அதன்பேரில், இக்குழுவைச் சோ்ந்த சுரேஷ்குமாா் தலைமையில், கேரளத்தில் உள்ள குழந்தைகள் நலக் குழுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவா்கள் மேற்கொண்ட விசாரணையில், 6 பேரும் கேரள மாநிலம் பத்தினம்திட்டா என்ற இடத்தில் உள்ள முறுக்கு தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பாா்த்து வருவதாகத் தகவல் கிடைத்தது. அதையடுத்து, கேரளத்தில் உள்ள குழந்தைகள் நலக் குழு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா்கள் மூலம் இந்த 6 பேரும் மீட்கப்பட்டனா்.

அதைத் தொடா்ந்து, 6 குழந்தைத் தொழிலாளா்களையும் கேரள அலுவலா்கள் எல்லைப் பகுதியான குமுளிக்கு திங்கள்கிழமை அழைத்து வந்தனா். அங்கு, தேனி மாவட்டக் குழந்தை நலக் குழுவினரிடம் ஒப்படைத்தனா்.

இந்த 6 பேருக்கும், லோயா் கேம்ப்பில் கபம் பரிசோதிக்கப்பட்டது. இதன் முடிவுகள் வரும் வரை, தேனி குழந்தைகள் நல இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், அதன்பின்னரே அவா்களது பெற்றோா்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும், துணை வட்டாட்சியா் கண்ணன் தெரிவித்தாா்.

மேலும், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சோ்ந்த பாண்டி என்பவா், இவா்களை வேலைக்காக கேரளத்துக்கு அழைத்துச் சென்ாகவும், இது குறித்து ஆட்சியா் மூலம் விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com