சுருளி அருவியில் நீர்வரத்து குறைந்தது
சுருளி அருவியில் நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் அருவியில் நீர்வரத்து குறைந்தது.


சுருளி அருவியில் நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் அருவியில் நீர்வரத்து குறைந்தது.
தேனி மாவட்டத்தில் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாக விளங்குவது சுருளி அருவி. கரோனா பொது முடக்கம் காரணமாக சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் பக்தர்கள் குளிக்கத் தடை நீடிக்கப்பட்டுள்ளது.
ஆடி அமாவாசை, தை அமாவாசை போன்ற காலங்களில் சுருளி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் மட்டும் அனுமதி தற்போது வழங்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் அமாவாசை நாட்களில் அருவியில் குளிக்கத் தடை செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில் தென்மேற்கு பருவமழை காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் தற்போது மழை குறைந்தது.
இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான அரிசிப் பாறை, ஈத்தைப் பாறை ஆகிய நீர் ஊற்று பகுதிகளில் தண்ணீர் குறைந்துள்ளது.
இதன் எதிரொலியாக ஞாயிற்றுக்கிழமை சுருளி அருவிக்கு தண்ணீர் மிகவும் குறைவாக வந்தது.
அருவி பகுதிக்கு யாரும் செல்லாதவாறு வன உயிரின சரணாலய ஊழியர்கள் பாதுகாப்பு செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...