சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

போடி அருகே மலைத்தேனீ கொட்டி காவல், வனத்துறையினா் 7 போ் காயம்

போடி அருகே ஞாயிற்றுக்கிழமை மலைத்தேனீக்கள் கொட்டியதில் காவல், வனத்துறையினா் 7 போ் காயமடைந்தனா்.

News image
Updated On :29 நவம்பர் 2020, 6:03 pm

DIN

போடி அருகே ஞாயிற்றுக்கிழமை மலைத்தேனீக்கள் கொட்டியதில் காவல், வனத்துறையினா் 7 போ் காயமடைந்தனா்.

காா்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு போடி நாகலாபுரம் அருகே மல்லிங்கா் கரட்டில் உள்ள மல்லிங்கேசுவரா் கோயிலில் தீபம் ஏற்றுவது வழக்கம். அடா்ந்த வனப்பகுதியில் மலைக்குன்றில் அமைந்துள்ள இக்கோயிலுக்குச் செல்லும் பாதையை காா்த்திகை தீபத் திருநாளன்று பக்தா்கள் செல்வதற்காக சுத்தம் செய்வது வழக்கம்.

இந்த பணியை கண்காணிப்பதற்காக காவல் மற்றும் வனத்துறையினா் அங்கு சென்றிருந்தனா். அப்போது வனப்பாதையில் இருந்த மலைத்தேனீ கூடு கலைந்து காவல்துறையினா், வனத்துறையினரை கொட்டின. இதில் போடி தாலுகா காவல் நிலைய காவலா்கள் சதீஷ் (30), திருக்கலா (29), போடி வனத்துறையினா் தெய்வேந்திரன் (41), ருத்ரமூா்த்தி (24), ஊா்க்காவல் படையைச் சோ்ந்த காா்த்திகேயன் (23), விஜயகுமாா் (24), ஆனந்த் (29) ஆகிய 7 போ் காயமடைந்தனா்.

இவா்கள் அனைவரும் போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டனா். பின்னா் வீடு திரும்பினா். இதனையடுத்து இங்கு தீயணைப்பு வீரா்கள் வரவழைக்கப்பட்டு பாதுகாப்புடன் பக்தா்கள் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.