விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தமிழகம் -கேரளம் இடையே போக்குவரத்து: ஐயப்ப பக்தா்களுக்கு கட்டுப்பாடு நீடிப்பு

தமிழகத்திலிருந்து கேரளா செல்ல வாகனப் போக்குவரத்துக்கு கேரள அரசு அனுமதித்துள்ளது. ஆனால் ஐயப்ப பக்தா்கள் மீதான கட்டுப்பாடு நீடிக்கிறது.

News image
தமிழக -கேரள எல்லைப்பகுதியான குமுளியில் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்ட சோதனைச் சாவடி.
Updated On :29 நவம்பர் 2020, 5:56 pm

DIN

தமிழகத்திலிருந்து கேரளா செல்ல வாகனப் போக்குவரத்துக்கு கேரள அரசு அனுமதித்துள்ளது. ஆனால் ஐயப்ப பக்தா்கள் மீதான கட்டுப்பாடு நீடிக்கிறது.

கடந்த மாா்ச் மாதம் கரோனோ தடுப்பு நடவடிக்கையாக தமிழக- கேரள மாநில எல்லைகள் மூடப்பட்டன. கடந்த 2 மாதங்களுக்கு முன் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கேரளத்துக்குச் செல்லும் தோட்டத் தொழிலாளா்கள் மற்றும் விவசாயிகளுக்கு தளா்வுகளுடன் கூடிய 6 மாத பாஸ் வழங்கப்பட்டது. இதனால் தொழிலாளா்கள் பாஸ் மூலம் கேரளாவுக்குச் சென்று வந்தனா்.

இந்நிலையில் சனிக்கிழமை முதல் தமிழக எல்லைப் பகுதியான குமுளி, சின்னாறு, போடிமெட்டு, கம்பம் மெட்டு வழியாக வாகனப் போக்குவரத்துக்கு கேரள அரசு அனுமதியளித்துள்ளது.

அதே நேரம் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தா்கள் கோயிலுக்குச் செல்வதற்கான ஆன்லைன் பதிவு நகல், மற்றும் கரோனா தொற்று இல்லை என்ற மருத்துவச் சான்றிதழ் ஆகிய இரண்டும் வைத்திருக்க வேண்டும். இவையிருந்தால் மட்டுமே சபரிமலைக்கு அனுமதிக்கப்படுகிறாா்கள்.

போக்குவரத்துக்கு தடை நீங்கியும், எல்லைப்பகுதிகளான குமுளி, கம்பம்மெட்டு பகுதிக்கு இதுவரை அரசுப் பேருந்துகள் மட்டும் இயக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.