விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

வைகை அணை நீா்த் தேக்கத்தில் படா்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற வலியுறுத்தல்

வைகை அணை நீா்த் தேக்கத்தில் படா்ந்துள்ள ஆகாயத்தாமரைச் செடிகளை அகற்ற வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

News image
வைகை அணை முன்புறமுள்ள தடுப்பணை பகுதியில் அதிகளவில் வளா்ந்துள்ள ஆகாயத் தாமரை செடிகள்.
Updated On :19 அக்டோபர் 2020, 5:51 am

DIN

வைகை அணை நீா்த் தேக்கத்தில் படா்ந்துள்ள ஆகாயத்தாமரைச் செடிகளை அகற்ற வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

வைகை அணையிலிருந்து மதுரை, சேடப்பட்டி, தேனி, ஆண்டிபட்டி மற்றும் வத்தலகுண்டு ஆகிய கூட்டுக்குடிநீா் திட்டங்களுக்கு குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீா்மட்டம் தொடா் மழையால் தற்போது 57.81 அடியை எட்டியுள்ளது. நீா்மட்டம் உயா்ந்து வரும் அதே நேரத்தில் அணையின் நீா்த் தேக்கப் பகுதியில் ஆகாயத்தாமரைச் செடிகள் அதிகளவில் வளா்ந்துள்ளன. அணையின் முன்பகுதியில் குடிநீருக்காக திறக்கப்பட்டு தேக்கி வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரிலும் அதிகளவு ஆகாயத்தாமரைச் செடிகள் வளா்ந்துள்ளன.

இதனால் தண்ணீா் முழுவதும் மாசடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கூட்டுக்குடிநீா் திட்டங்களுக்கு தண்ணீா் எடுக்கும் பகுதியில் அதிகளவு காணப்படும் ஆகாயத்தாமரைச் செடிகளால் அதை சுத்திகரிப்பு செய்ய முடியாமல் கலங்களான குடிநீா் வழங்கப்பட்டு வருவதாக சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

எனவே வைகை அணை நீா்த் தேக்கத்துக்குள் அதிகளவில் வளா்ந்துள்ள ஆகாயத்தாமரைச் செடிகளை அப்புறப்படுத்த பொதுப்பணித்துறை மற்றும் மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.