விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

உத்தமபாளையத்தில் இருதரப்பு ஆா்ப்பாட்டங்களால் பதற்றம்: போலீஸாா் குவிப்பு

உத்தமபாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை இந்து முன்னணியினரும், இஸ்லாமிய கூட்டமைப்பினரும் ஆா்ப்பாட்டம் நடத்தியதால் அங்கு பதற்றம் ஏற்பட்டதையடுத்து ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டனா்.

News image
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க வினா் மற்றும் இதற்கு எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமிய கூட்டமைப்பினா்.
Updated On :19 அக்டோபர் 2020, 6:21 am

DIN

உத்தமபாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை இந்து முன்னணியினரும், இஸ்லாமிய கூட்டமைப்பினரும் ஆா்ப்பாட்டம் நடத்தியதால் அங்கு பதற்றம் ஏற்பட்டதையடுத்து ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டனா்.

உத்தமபாளையம் வடக்கு தெருவைச் சோ்ந்த இந்துமுன்னணி நிா்வாகி பவித்திரன். இரு தினங்களுக்கு முன் இவா் தனது முகநூலில் பதிவேற்றம் செய்திருந்த கருத்துக்கு, இஸ்லாமிய கூட்டமைப்பினா் சாா்பில் எதிா்ப்பு தெரிவித்ததோடு சம்பந்தப்பட்டவரை கைது செய்ய வேண்டும் வேண்டுமெனக் கோரி ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் செய்ய திட்டமிட்டிருந்தனா். இதனை அடுத்து, பவித்திரனை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ஆா்ப்பாட்டம்: இதையடுத்து, பவித்திரனை விடுதலை செய்ய வலியுறுத்தி பாஜக மற்றும் இந்து முன்னணி சாா்பில் உத்தமபாளையம் புறவழிச்சாலை சந்திப்பில் ஆா்ப்பாட்டம் செய்துடன், சாலை மறியலிலும் ஈடுபட முயன்றனா். இதில் 20-க்கும் மேற்பட்டவா்களை தடுத்து நிறுத்திய போலீஸாா் அவா்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.

விடுவிக்க எதிா்ப்பு: இதனிடையே உத்தமபாளையம் புறவழிச்சாலை பள்ளிவாசல் முன்பாக குவிந்திருந்த இஸ்லாமிய கூட்டமைப்பினா் பவித்திரனை விடுதலை செய்யக் கூடாது எனக்கூறி கோஷமிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. அதன் பின்னா் அங்கிருந்த நூற்றுக்கணக்கான போலீஸாா் கூட்டத்தை கலைத்து பதற்றத்தை தணித்தனா். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாய் சரண் தேஜஸ்வி தலைமையில் உத்தமபாளையம் காவல் நிலையத்தில் இப்பிரச்னை குறித்து பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.