விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ஆண்டிபட்டியில் இந்திய கம்யூ. மறியல் 

ஆண்டிபட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
ஆண்டிபட்டியில் மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்.
Updated On :12 அக்டோபர் 2020, 8:15 am

DIN

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆண்டிபட்டி இந்தியன் வங்கி முன்பு நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பரமேஸ்வரன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் பிச்சைமணி முன்னிலை வகித்தார். இந்த போராட்டத்தின் போது மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் புதிய சட்ட திருத்த மசோதாவை கைவிடக் கோரியும், இலவச மின்சாரத் தடை செய்யும் நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும் எனவும், தொழிலாளர் நலச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வருவதைக் கண்டித்தும், பொதுத்துறையை தனியாருக்கு தாரை வார்ப்பது உள்ளிட்ட சட்டம் அதாவது மசோதாக்களை உடனடியாக மத்திய அரசு கைவிட வேண்டும் என கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து அனுமதியின்றி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் 120 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.