விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

போடி அருகே ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து திருட முயன்றவர் கைது

போடி அருகே ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து திருட முயன்றவரை 24 மணி நேரத்தில் காவல்துறையினர் கைது செய்தனர்.

News image
Updated On :30 அக்டோபர் 2020, 5:42 am

DIN

போடி அருகே ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து திருட முயன்றவரை 24 மணி நேரத்தில் காவல்துறையினர் கைது செய்தனர்.

போடி அருகே சில்லமரத்துப்பட்டியில் போடி-தேவாரம் சாலையில் பாரத ஸ்டேட் வங்கி சார்பில் ஏ.டி.எம். மையம் அமைக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை அதிகாலை இந்த மையத்தில் உள்ள ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து திருட முயற்சி நடந்தது. இதில் இயந்திரத்தில் வைக்கப்பட்டிருந்த 15 லட்சம் ரூபாய் தப்பியது. இதுகுறித்து போடி பாரத ஸ்டேட் வங்கி கிளை மேலாளர் கார்த்திகேயன் (32) என்பவர் கொடுத்த புகாரின் பேரில் போடி தாலுகா காவல் நிலைய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். 

போடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஜி.பார்த்திபன் அறிவுரையின்பேரில் காவல்துறையினர் தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடி வந்தனர். கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து திருட முயன்றது போடி முந்தல் ஆதிதிராவிடர் காலனியைச் சேர்ந்த முருகன் மகன் ரஞ்சித்குமார் (28) என்பது தெரியவந்தது. இதனையடுத்து போடி தாலுகா காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து திருட முயன்றவரை 24 மணி நேரத்தில் காவல்துறையினர் கைது செய்த சம்பவத்தையடுத்து போடி டி.எஸ்.பி. பார்த்திபன் தலைமையிலான காவலர்களை பொதுமக்கள் பாராட்டினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.