விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

போடியில் தேவர் ஜயந்தி விழா

போடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேவர் ஜயந்தி விழாவில் அரசியல் கட்சியினர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

News image
தேவர் ஜயந்தியை முன்னிட்டு பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கல்.
Updated On :30 அக்டோபர் 2020, 9:10 am

DIN

போடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேவர் ஜயந்தி விழாவில் அரசியல் கட்சியினர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தேனி மாவட்டம், போடி ஒன்றியம் அணைக்கரைபட்டி கிராமத்தில் 113ஆவது தேவர் ஜயந்தி விழா மற்றும் 58ஆவது குருபூஜை விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அணைக்கரைபட்டி கிராம ஊராட்சி மன்ற தலைவர் லோகு தலைமை தாங்கினார். பார்வர்டு பிளாக் கட்சி மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் ராஜா  முன்னிலை வகித்தார். அதிமுக கிளை செயலாளர் ஆதி வரவேற்றார். 

தேனி மாவட்ட ஜெ பேரவை பொருளாளர் குறிஞ்சிமணி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். ஊர் பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோருக்கு மரக்கன்றுகள் வழங்கினார். நிகழ்ச்சியில் போடி ஊராட்சி ஒன்றிய துனை தலைவர் வெங்கடேஷ், உட்பட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தேவர் பேரவை நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.  

போடி பேருந்து நிலையம் அருகே உள்ள தேவர் சிலைக்கு அ.தி.மு.க, தி.மு.க, காங்கிரஸ், பார்வர்டு பிளாக் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் தனித்தனியே வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல் சமுதாய சங்கங்கள் சார்பிலும் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. போடி புதூரில் உள்ள தேவர் சிலைக்கும் அப்பகுதியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.