ஈரானில் உள்ள இந்திய மாணவ, மாணவிகளின் கதி என்ன?இன்று (மார்ச் 1) இந்திய விமான நிறுவனங்களால் இயக்கப்படும் 350 விமானங்கள் ரத்து! ஈரானின் புதிய தலைமை மதகுரு இன்று தேர்வு! கமேனியின் மகன் பதவியேற்க வாய்ப்புதமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை 9 மடங்கு அதிகரித்துள்ளோம்- பிரதமர் மோடி பழிவாங்கினால் விளைவுகள் கடுமையாக இருக்கும்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை!புதுச்சேரி வளர்ச்சிக்கு காங்கிரஸ், திமுக வேகத் தடையாக இருந்தன: பிரதமர் மோடி இஸ்ரேல் - ஈரான் போர்! இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்!நாக்பூரில் வெடிபொருள் தயாரிப்பு தொழிற்சாலையில் வெடிவிபத்து: 15 பேர் பலிஈரான் பள்ளி மீது தாக்குதல்: பலி எண்ணிக்கை 148-ஆக உயர்வு
/

போடியில் இந்திய கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு வழங்கும் மத்திய அரசின் போக்கைக் கண்டித்து போடியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
போடியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.
Updated On :27 ஜனவரி 2024, 5:15 pm

DIN

போடி: பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு வழங்கும் மத்திய அரசின் போக்கைக் கண்டித்து போடியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தேவா் சிலை திடலில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு நகரச் செயலா் முருகேசன் தலைமை வகித்தாா். நகர துணைச் செயலா்கள் கே.சத்தியராஜ், எம்.சுந்தா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், ரயில்வே, மின்சாரம், நிலக்கரி, இரும்புத்தாது, விமான நிலையம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு வழங்கும் மத்திய அரசின் போக்கைக் கண்டித்தும், புதிய கல்விக் கொள்கை, கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலை உயா்வு ஆகியவற்றைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில், மாவட்ட துணைச் செயலா் கே.பெருமாள் மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.