4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

“எம்.ஜி.ஆரின் மறு உருவமே”: தேனியில் நடிகர் விஜய் ரசிகர்களின் சுவரொட்டியால் பரபரப்பு 

தேனி நகர்பகுதிகளில் நடிகர் விஜய்யை தமிழக நடிகரும் முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரைப் போல சித்தரித்து ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News image
தேனியில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்
Updated On :5 செப்டம்பர் 2020, 7:19 am

DIN

தேனி நகர்பகுதிகளில் நடிகர் விஜய்யை தமிழக நடிகரும் முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரைப் போல சித்தரித்து ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தேனியில் நடிகர் விஜய்யை 'ரிக்ஷாக்காரன்', ’எங்க வீட்டுப்பிள்ளை' திரைப்படங்களில் தோன்றும் எம்.ஜி.ஆர். போல சித்தரித்து, விஜய் ரசிகர்கள் சார்பில் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

தேனி நகர்பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள இந்தச் சுவரொட்டிகளில் 'எம்.ஜி.ஆரின் மறு உருவமே! மாஸ்டர் வாத்தியாரே! அழைக்கிறது தமிழகம் தலைமையேற்க' என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

நடிகர் விஜய் ரசிகர்களால் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டிகளால் தேனியில் விஜய் ரசிகர்கள் மற்றும் அதிமுகவினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னதாக மதுரையில் பகுதிகளில் இதே போன்ற சுவரொட்டிகள் விஜய் ரசிகர்களால் ஒட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.