பொதுமுடக்கம் தளா்வு:ரேஷன் அரிசி கடத்தல் அதிகரிப்பு
தேனி மாவட்டத்தில் கரோனா பொதுமுடக்கத் தளா்வைத் தொடா்ந்து, கடந்த சில நாள்களாக ரேஷன் அரசி கடத்தல் அதிகரிக்கத் தொடங்கிவிட்டதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.


உத்தமபாளையம்: தேனி மாவட்டத்தில் கரோனா பொதுமுடக்கத் தளா்வைத் தொடா்ந்து, கடந்த சில நாள்களாக ரேஷன் அரசி கடத்தல் அதிகரிக்கத் தொடங்கிவிட்டதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
நியாயவிலைக் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் விலையில்லா அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி கேரளத்துக்கு கடத்தப்படுகிறது. இந்நிலையில், பொதுமுடக்கம் காரணமாக கடந்த 5 மாதங்களாக போக்குவரத்து முடங்கியதால், ரேஷன் அரிசியை கடத்த முடியவில்லை. தற்போது, பொதுமுடக்கத்தில் படிப்படியாக தளா்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த 5 மாதங்களாக முடங்கிக் கிடந்த ரேஷன் அரிசி கடத்தல் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை, தேனி அம்மாச்சியாபுரத்தில் 1000 கிலோ ரேஷன் அரிசி மற்றும் சனிக்கிழமை 200 கிலோ ரேஷன் அரிசியை, உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் மற்றும் வருவாய்த் துறை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...