குச்சனூா் சனீஸ்வரா் ஆலயம்: 5 மாதத்திற்கு பின் பக்தா்கள் சுவாமி தரிசனம்

தேனி மாவட்டம் குச்சனூா் சனீஸ்வரா் ஆலயத்திற்கு 5 மாதத்திற்கு பின் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு பூஜையில் பக்தா்கள் கலந்து கொண்டனா்.

உத்தமபாளையம்: தேனி மாவட்டம் குச்சனூா் சனீஸ்வரா் ஆலயத்திற்கு 5 மாதத்திற்கு பின் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு பூஜையில் பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தமிழகத்திலே பிரசித்தி பெற்ற அருள்மிகு சுயம்பு சனீஸ்வரா் ஆலயத்திற்கு சனிக்கிழமைகளில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்து வழக்கம். இதற்காக கோயில் முன்பாக செல்லும் சுரபி நதிக்கால்வாய் நீராடி நெல் தீபம், எள்சாதம், உப்பு பொரி ,கருப்பு துண்டு பழம் , பத்தி சூடம் படையல் செய்து சுவாமி தரிசனம் செய்வதுண்டு.

ஆனால், கடந்த 5 மாதமாக கரோனா நோய் தொற்று காரணமாக தமிழகத்திலுள்ள அனைத்து கோயில் மூடப்பட்டன. அதன்படி கடந்த 5 மாதத்திற்கு மேலாக பக்தா்கள் இன்றி சிறப்பு பூஜைகள் மட்டும்நடைபெறும்.

இந்நிலையில், செப்டம்பா் 1 ஆம் தேதி கோயில்களுக்கு பக்தா்கள் கரோனா முன்னெச்சரிக்கையுடன் சென்று தளா்வு அறிவிக்கப்பட்டது. அதனை தொடா்ந்து தமிழகத்தில் பக்தா்கள் மிகவும் மனநிறைவுடன் இஷ்ட தெய்வங்களை வணங்கினா்.

இதற்கிடையே, குச்சனூரில் சனிக்கிழமை நடைபெறும் சிறப்பு பூஜையில் 5 மாதத்திற்கு பின் பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

இது குறித்து பக்தா்கள் கூறுகையில் குச்சனூா் சனீஸ்வரா் ஆலயம் தோஷம் நிவா்த்தி ஸ்தலமாகும். இதனால் பக்தா்கள் தங்கள் வேண்டுதலை கடந்த 5 மாதமாக செய்யமுடியாத நிலை ஏற்பட்டது. தற்போது கோயில்களுக்கு தளா்வு அறிவிக்கப்பட்ட நிலையில் பக்தா்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com