போடியில் தொடர் மழை: கொட்டகுடி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு
போடியில் தொடர்ந்து பெய்த பரவலான மழையினால் கொட்டகுடி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.


போடியில் தொடர்ந்து பெய்த பரவலான மழையினால் கொட்டகுடி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
தேனி மாவட்டம், போடி பகுதியில் கடந்த சில நாள்களாக பரவலான மழை பெய்து வருகிறது. கொட்டகுடி, குரங்கணி, போடி மெட்டு, பிச்சங்கரை, ஊத்தாம்பாறை உள்ளிட்ட மலைப் பகுதியிலும், போடி நகர் பகுதியிலும் நல்ல மழை பெய்தது. ஞாயிறு இரவு வரை பெய்த மழையால் மலைப்பகுதியில் நீரோடைகளில் தண்ணீர் வரத்து ஏற்பட்டது.
இந்த தண்ணீர் கொட்டகுடி ஆற்றுடன் கலந்து கொட்டகுடி ஆற்றிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. போடி பிள்ளையார் கோயில் தடுப்பணையில் தண்ணீர் அருவி போல் கொட்டுவதால் பொதுமக்கள் குளித்து மகிழ்ந்தனர். தொடர் மழையால் போடி பகுதியில் கண்மாய்களுக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதுடன் நிலத்தடி நீர்மட்டமும் அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...