தொடர் மழை: சுருளி அருவி பகுதியில் நீர் வரத்து அதிகரிப்பு
சுருளி அருவி நீர்பிடிப்பு வனப்பகுதிகளில் தொடர்மழை பெய்து வருவதால், நீர்வரத்து அதிகரித்து வருகிறது.


சுருளி அருவி நீர்பிடிப்பு வனப்பகுதிகளில் தொடர்மழை பெய்து வருவதால், நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
தேனி மாவட்டத்தில் புகழ்பெற்றது சுருளி அருவி, ஆண்டு தோறும் நீர்வரத்து தரும் சுருளி அருவியில், கடந்த மார்ச் 25 முதல் கரோனா தொற்று காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. தற்போது சுருளி அருவியின் நீர்பிடிப்பு பகுதிகள் உள்ள ஈ்ததைப்பாறை, அரிசிப்பாறை வனப்பகுதியில் உள்ள ஓடைகள் மற்றும் நீர் ஊற்றுகளில் தண்ணீர் வரத்து வந்து, அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது.
அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதித்து இருப்பதால், அருவி வளாகம் சுத்தமாக காட்சியளிக்கிறது, வெள்ளி கம்பிகள் உருக்கி வெள்ளம் போல், தண்ணீர் பார்ப்பதற்கு வெண்மையாக கொட்டுகிறது. இது பற்றி மேகமலை வனச்சரணாலய அலுவலர் ஒருவர் கூறும் போது, சுருளி அருவியில் பொதுமக்கள் வர தடை இருப்பதால், பகலிலேயே யானை உள்ளிட்ட விலங்குகள் நடமாட்டம் உள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...