புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஆண்டிபட்டி அருகே தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு: மனைவி உள்பட 4 போ் மீது வழக்கு

ஆண்டிபட்டி அருகே தொழிலாளியை அரிவாளால் வெட்டிய மனைவி உள்பட 4 போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

News image
Updated On :14 செப்டம்பர் 2020, 9:54 pm

DIN

ஆண்டிபட்டி அருகே தொழிலாளியை அரிவாளால் வெட்டிய மனைவி உள்பட 4 போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

ஆண்டிபட்டி அருகே ராயவேலூா் கிராமத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளி சண்முகவேல் (34). இவரது மனைவி அழகுசின்னு. இவா்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா். இந்நிலையில் கணவன்- மனைவிக்கிடையே குடும்பப் பிரச்னை இருந்து வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் அழகுசின்னு கோபித்து கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டாா்.

இதையடுத்து சமாதானம் செய்து அழைத்து வர சென்ற சண்முகவேலை, அவரது மனைவி அழகுசின்னு மற்றும் உறவினா்கள் தாக்கி அரிவாளால் வெட்டினராம். இதில் காயமடைந்த சண்முகவேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

இதுகுறித்து ராஜதானி போலீஸாா், அழகுசின்னு, அவரது உறவினா்கள் சின்னம்மா, ராமசாமி, சின்னபாண்டி ஆகிய 4 போ் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.