திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

போடியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில்  ஆர்ப்பாட்டம்

போடியில் சனிக்கிழமை, மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

News image
போடியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சிகள்.
Updated On :19 செப்டம்பர் 2020, 12:21 pm

DIN

போடியில் சனிக்கிழமை, மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படும் மத்திய, மாநில அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும், கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக செயல்படும் மோடியை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் போடி நகர், ஒன்றிய பகுதிகளில் 15 மையங்களில் நடைபெற்றது. 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.ரவிமுருகன், சி.பி.எம்  மாநிலக் குழு உறுப்பினர் கே.ராஜப்பன் ஆகியோர் தலைமை வகித்தனர். சி.பி.ஐ. கட்சி போடி ஒன்றிய செயலாளர்  மணிகண்டன்  சி.பி.எம்  தாலூகா செயலாளர் செல்வம்,  சி.பி.ஐ. நகர துணை செயலாளர் கே.சத்தியராஜ் மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்று கோரிக்கை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.