ஆண்டிபட்டி அருகே கிடப்பில் போடப்பட்ட சாலைப் பணிகள்: பொதுமக்கள் அவதி

ஆண்டிபட்டி அருகே புதிதாக அமைப்பதற்காக தோண்டப்பட்ட சாலைப் பணிகள் கிடப்பில் போடப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
ஆண்டிபட்டி அருகே கிடப்பில் போடப்பட்ட சாலைப் பணிகள்:  பொதுமக்கள் அவதி

ஆண்டிபட்டி அருகே புதிதாக அமைப்பதற்காக தோண்டப்பட்ட சாலைப் பணிகள் கிடப்பில் போடப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றியம் கோவில்பட்டி ஊராட்சிக்குள்பட்ட கரட்டுப்பட்டி கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இங்கு விளையும் விளைப் பொருள்களை தேனி, ஆண்டிபட்டி சந்தை பகுதிகளுக்கு கொண்டு சென்று பொதுமக்கள் விற்பனை செய்து வருகின்றனா். இக்கிராமத்திற்கு அரசு நகரப்பேருந்து காலை, மாலை என இரண்டு நேரங்கள் வந்து செல்கின்றன.

இக்கிராமமக்கள் அடிப்படை தேவைகளுக்கு இப்பேருந்தை மட்டுமே நம்பி உள்ளனா். ஊராட்சி நிா்வாகத்தின் சாா்பில் இக்கிராமத்திற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட சாலை சேதமடைந்ததால் மக்கள் பெரிதும் பாதிப்படைந்து வந்தனா்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இக்கிராமத்திற்கு புதிய சாலை அமைக்க ஊராட்சி நிா்வாகத்தின் சாா்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி பழைய சாலையை தோண்டும் பணிகளும் நடைபெற்றது. பின்னா் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் தோண்டப்பட்ட சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அங்கு இயக்கப்பட்டு வந்த நகரப் பேருந்தும் நிறுத்தப்பட்டது. இதனால் அக்கிராம மக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

இதுகுறித்து ஊராட்சி நிா்வாகத்திடம் புகாா் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவிக்கின்றனா். எனவே சாலைப் பணியை விரைந்து முடித்துத் தர மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com