கம்பம் அருகே தாய், மகள் தற்கொலை
By DIN | Published On : 03rd March 2020 05:10 PM | Last Updated : 03rd March 2020 05:10 PM | அ+அ அ- |

தேனி மாவட்டம், கம்பம் அருகே ராயப்பன்பட்டியில் குடும்ப தகராறு காரணமாக செவ்வாய்க்கிழமை தாய், மகள் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.
கம்பம் அருகே ராயப்பன்பட்டி எஸ்.யூ.எம். பள்ளி தெருவைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மனைவி அனுசுயா (39), மகள் ஷாரு தர்ஷனா (14). இவர்களது குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக தாய், மகள் இருவரும் செவ்வாய்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.
இந்த சம்பவம் குறித்து ராயப்பன்பட்டி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...