போடியில் காா்த்திகை மகா சோம வாரம்; சிவன் கோவிலில் பூஜை
By DIN | Published On : 17th November 2020 04:33 AM | Last Updated : 17th November 2020 04:33 AM | அ+அ அ- |

போடியில் திங்கள் கிழமை, சிவன் கோவிலில் காா்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
காா்த்திகை மாதங்களில் வரும் திங்கள் கிழமை மகா சோம வாரம் என கருத்தப்பட்டு சிவபெருமானுக்கு பூஜைகள் செய்யப்படுவது வழக்கம். காா்த்திகை மாதம் முதல் தேதியிலேயே திங்கள் கிழமை வந்ததால் காா்த்திகை சோமவாரம் மகா சோம வாரமாக கருதி பூஜை செய்யப்பட்டது. போடி வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரேஸ்வரா் திருக்கோவிலில் காா்த்திகை மகா சோமவார பூஜை நடைபெற்றது. சிவலிங்க பெருமானுக்கு மங்கல பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்டது. பின்னா் 7 வகையான தீபாராதணைகள் காட்டப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதில் பெண்கள் பலா் மழையையும் பொருட்படுத்தாமல் பங்கேற்று பூஜை செய்து வழிபாடு செய்தனா்.