போடி மலைக்கிராமத்திற்கு குதிரைகள் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

போடி அருகே மலைக்கிராமத்திற்கு திங்கள் கிழமை குதிரைகள் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன.
போடி மலைக் கிராமத்திற்கு குதிரைகள் மூலம் கொண்டு செல்லப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள்.
போடி மலைக் கிராமத்திற்கு குதிரைகள் மூலம் கொண்டு செல்லப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள்.

போடி அருகே மலைக் கிராமத்திற்கு திங்கள்கிழமை குதிரைகள் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன.

தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் சட்டப்பேரவை தொகுதியில் கொட்டகுடி, குரங்கணி, கொழுக்குமலை, காரிப்பட்டி, சென்ட்ரல் ஸ்டேசன், டாப் ஸ்டேசன், போடிமெட்டு, அகமலை, ஊரடி-ஊத்துக்காடு, அலங்காரம், முந்தல், முந்தல் காலனி ஆகிய மலைக்கிராம வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 5 ஆயிரத்து 314 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 

இந்த வாக்குச் சாவடிகளுக்கு 5 மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. இதில் போடி அருகே உள்ள சென்ட்ரல் ஸ்டேசன், பெரியகுளம் அருகே உள்ள ஊத்துக்காடு ஆகிய மலை கிராமங்களுக்கு வாகனங்கள் செல்ல முடியாது. சென்ட்ரல் ஸ்டேசன் வாக்குச்சாவடியில் 190 வாக்காளர்களும், ஊத்துக்காடு வாக்குச்சாவடியில் 463 வாக்காளர்களும் வாக்களிக்க உள்ளனர்.

இதையும் படிக்கலாமே.. தலைவர்கள் ஒரு பார்வை...

சென்ட்ரல் ஸ்டேசன் மலைக் கிராம வாக்குச்சாவடிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் குரங்கணி மலை கிராமத்திற்கு லாரி மூலம் கொண்டுவரப்பட்டு பின்னர் குதிரைகள் மூலம் சென்ட்ரல் ஸ்டேசன் வாக்குச்சாவடிக்கு கொண்டு செல்லப்பட்டது. இப்பகுதி நக்சல் தடுப்பு பிரிவு போலீஸாரின் கண்காணிப்பில் உள்ளதால் பலத்த பாதுகாப்புடன் இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன. 

வாக்குப்பதிவு இயந்திரத்துடன் மண்டல அலுவலர் சிவக்குமார் தலைமையில் வாக்குச்சாவடி அலுவலர்களும், துப்பாக்கி ஏந்திய போலீஸாரும், நக்சல் தடுப்பு பிரிவு போலீஸாரும் உடன் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com