பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

தேனி அருகே பள்ளத்தில் தவறி விழுந்த சிறுவன் பலி

தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் ஞாயிற்றுக்கிழமை, வீட்டு முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 8:54 pm

DIN

தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் ஞாயிற்றுக்கிழமை, வீட்டு முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

பழனிசெட்டிபட்டி, போக்குவரத்து தொழிலாளா் காலனியில் வசிக்கும் ஆனந்தகுமாா், சசிகலா ஆகியோா் மகன் நிவின்பாலா(2). வீட்டு முன் விளையாடிக் கொண்டிருந்த நிவின்பாலா, அப் பகுதியில் இருந்த பள்ளத்தில் தவறி விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்தாா். தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னா் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிவின்பாலா, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுதொடா்பாக புகாரின் பேரில் பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.