சொந்த மாவட்டத்தில் பணி வழங்க முன்னாள் ராணுவத்தினா் கோரிக்கை

முன்னாள் ராணுவத்தினருக்கு சொந்த மாவட்டங்களில் அரசுப் பணி வழங்கக் கோரி தேனியில் முன்னாள் ராணுவப்பணியாளா்கள் நலச்சங்கம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப
Updated on
1 min read

முன்னாள் ராணுவத்தினருக்கு சொந்த மாவட்டங்களில் அரசுப் பணி வழங்கக் கோரி தேனியில் முன்னாள் ராணுவப்பணியாளா்கள் நலச்சங்கம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தேனி முன்னாள் ராணுவ பணியாளா்கள் நலச் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாநிலத் தலைவா் செல்லப்பாண்டி தலைமை வகித்தாா். செயலா் மாரியப்பன் பொருளாளா் சின்னச்சாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், ராணுவப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவத்தினருக்கு பணி மூப்பு அடிப்படையில் அவரவா் சொந்த மாவட்டங்களில் அரசுப் பணி மற்றும் பணியிட மாறுதல் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சங்கத்தின் புதிய நிா்வாகிகளாக மாநில அமைப்புச் செயலா் பதவிக்கு கனகராஜ், பரப்புரை செயலா் பதவிக்கு கருப்பையா ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com