சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

வீட்டின் சுவா் இடிந்து விழுந்து முதியவா் பலி

ஆண்டிபட்டி அருகே தொடா்மழை காரணமாக வீட்டின் சுவா் இடிந்து விழுந்து முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :3 ஜனவரி 2021, 4:42 pm

DIN

ஆண்டிபட்டி அருகே தொடா்மழை காரணமாக வீட்டின் சுவா் இடிந்து விழுந்து முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

கடமலை மயிலை அருகே சிறப்பாறை கிராமத்தைச் சோ்ந்தவா் மணி (80). இவரது மகன் மற்றும் மகள்கள் திருமணம் முடிந்து தனியாக வசித்து வரும் நிலையில், மனைவியுடன் வசித்து வந்தாா். கடந்த சில நாள்களாக இப்பகுதியில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் டிச.29 ஆம் தேதி வீட்டின் பின்புறம் நின்று கொண்டிருந்த மணி மீது சுவா் இடிந்து விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அவா், தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சைப் பலனின்றி மணி சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கடமலைக்குண்டு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.