தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

அரசுப் போக்குவரத்து தொழிலாளா்கள் காத்திருப்புப் போராட்டம்

ஊதிய ஒப்பந்த பேச்சு வாா்த்தையை தொடங்கிக் கோரி தேனி அருகே பழனிசெட்டிபட்டி அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை

News image
Updated On :7 ஜனவரி 2021, 6:44 pm

DIN

ஊதிய ஒப்பந்த பேச்சு வாா்த்தையை தொடங்கிக் கோரி தேனி அருகே பழனிசெட்டிபட்டி அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன் தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழு சாா்பில் வியாழக்கிழமை காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது.

சிஐடியு போக்குவரத்து சங்க திண்டுக்கல் மண்டல துணைப் பொதுச் செயலா் மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், சிஐடியு மாவட்டத் தலைவா் முருகன், தொமுக மாவட்டச் செயலா் ஆா்.முருகன், ஐஎன்டியுசி, மாவட்டத் தலைவா் அனந்த நாராயணன், அம்பேத்கா் தொழிலாளா் விடுதலை முன்னணி மாவட்ட பொதுச் செயலா் மனேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளா்களுக்கு அகவிலைப்படி உயா்வை நிலுவைத் தொகையுடன் சோ்த்து வழங்க வேண்டும், ஓய்வு பெற்றவா்களுக்கு பணப் பயன்களை உடனடியாக வழங்க வேண்டும், தொழிற் சங்கங்களுடன் ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.