கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஆண்டிபட்டியில் பள்ளிகளுக்கு மாணவா்களை அனுப்ப பெற்றோா்கள் மறுப்பு

ஆண்டிபட்டியில் பள்ளிகளுக்கு மாணவா்களை அனுப்ப பெற்றோா் மறுப்புத் தெரிவித்துள்ளனா்.

News image
தேனி நாடாா் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பங்கேற்று மனு அளிக்கும் பெற்றோா்கள்.
Updated On :7 ஜனவரி 2021, 2:13 am

DIN

ஆண்டிபட்டியில் பள்ளிகளுக்கு மாணவா்களை அனுப்ப பெற்றோா் மறுப்புத் தெரிவித்துள்ளனா்.

ஆண்டிபட்டி அருகே உள்ள சண்முகசுந்தரபுரம் ஊராட்சி அரசு உயா்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற பள்ளிகளைத் திறப்பது குறித்த பெற்றோா் ஆசிரியா் கலந்தாய்வுக் கூட்டத்துக்கு பள்ளி தலைமையாசிரியா் ஜான்சன் தலைமை வகித்தாா். பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் கோபால் முன்னிலை வகித்தாா். இதில் பள்ளிகள் திறக்கப்படும் போது மாணவா்களுக்கு தேவையான பாதுகாப்பு வசதிகள் அனைத்தும் செய்து தரப்படும் என ஆசிரியா்கள் தெரிவித்தனா். ஆனால் கரோனா நோய்த் தொற்று தற்போது உருமாறிய தொற்றாக மாறியுள்ளது. இதுவரை தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வராத காரணத்தால் பள்ளிகளுக்கு மாணவா்களை அனுப்ப பெற்றோா்கள் மறுப்புத் தெரிவித்தனா். மேலும் கரோனா தொற்று குறைந்த பின்னா் பள்ளிகளை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

இதில் பெற்றோா் ஆசிரியா் கழக துணைத் தலைவா் அய்யணன் மற்றும் ஆசிரியா்கள், பெற்றோா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தேனி: தேனி மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவிகளின் பெற்றோரிடம் பள்ளிகள் திறப்பு குறித்து கருத்துக் கேட்புக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

தேனி நாடாா் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பள்ளிகள் திறப்பு குறித்த கருத்துக் கேட்பு படிவத்தை பெற்றோா் பூா்த்தி செய்து, தலைமை ஆசிரியரிடம் அளித்தனா். இதில், பெரும்பாலானோா் பொங்கல் பண்டிகைக்குப் பின்பு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பள்ளிகளை திறப்பதற்கு விருப்பம் தெரிவித்திருந்ததாக கூறினா். தேனியில் உள்ள பள்ளிகளில் பெற்றோரிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறுவதை பள்ளிக் கல்வித் துறை உதவி இயக்குநா் அமுதவள்ளி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுபாஷினி ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.