சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

லோயர்கேம்ப் குமுளி மலைப்பாதையில் புலி, கரடி விலங்குகள் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

லோயர்கேம்ப் குமுளி மலைப்பாதையில் புலி, கரடி போன்ற வன விலங்குகள் நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

News image
கோப்புப் படம்
Updated On :8 ஜனவரி 2021, 12:01 pm

DIN

லோயர்கேம்ப் குமுளி மலைப்பாதையில் புலி, கரடி போன்ற வன விலங்குகள் நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

தேனி மாவட்டம், லோயர் கேம்ப் குமுளி மலைப்பாதை மேகமலை வன உயிரினச்சரணாலயப்பகுதியில் உள்ளது. இதனையொட்டி அருகே தேக்கடி பெரியாறு புலிகள் வனச்சரணாலயம் உள்ளது. பொதுமுடக்க காலத்தில் லோயர்கேம்ப் மலைப்பதையில் பொதுப்போக்குவரத்துக்கு அனுமதியில்லை. 

இதனால் மலைச்சாலையில் வன விலங்குகளான, புலி, சிறுத்தைப்புலி, கரடி, மிளாமான்கள் தாராளமாக நடமாடின. இதற்கிடையில் தேசிய நொடுஞ்சாலை ஆணையகம் இந்த இடைப்பட்ட காலத்தில் மலைச்சாலை பணிகளை முடித்து, ஜன 6 ஆம் தேதி முதல் பொது போக்குவரத்து தொடங்கியது. 

இதற்கிடையில் கூடலூர், லோயர்கேம்ப் பகுதியைச் சேர்ந்த பால் உள்ளிட்ட வியாபாரிகள் காலை நேரத்தில் மலைச்சாலையில், செல்லும் போது கரடி மற்றும் புலி ஆகிய விலங்குகளை கண்டுள்ளனர். இதனால் பீதியடைந்தவர்கள் சம்மந்தப்பட்ட வனம் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனால் காவல் மற்றும் வனத்துறையினர் மலைச்சாலை பகுதியை கண்காணிக்க கோரியுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.