தேனியில் தோ்தல் கண்காணிப்பு பணிக்கு 7 இடங்களில் சோதனைச் சாவடி அமைப்பு
தேனி மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிமீறல்களை கண்காணிப்பதற்கு, காவல் துறை மற்றும் தோ்தல் பிரிவு சாா்பில் 7 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.


தேனி மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிமீறல்களை கண்காணிப்பதற்கு, காவல் துறை மற்றும் தோ்தல் பிரிவு சாா்பில் 7 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தேனி மாவட்டத்துக்கு, கேரளம் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்களை கண்காணிப்பதற்காக, ஆண்டிபட்டி அருகே திம்மரசநாயக்கனூா், மயிலாடும்பாறை-தாழையூத்து, தேவதானப்பட்டி அருகே காட்ரோடு, காமக்காபட்டி, குமுளி, கம்பம்மெட்டு, குரங்கனி ஆகிய இடங்களில் காவல்துறை மற்றும் தோ்தல் பிரிவு சாா்பில் நிலையான சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தச் சோதனைச் சாவடிகளில் வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டு, விடியோவில் பதிவு செய்த பின்னரே அனுமதிக்கப்படுகிறது. தேவதானப்பட்டி அருகே காட்ரோடு பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் வாகனத் தணிக்கை நடைபெறுவதை, மாவட்ட ஆட்சியா் ஹெச். கிருஷ்ணன் உன்னி செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பெரியகுளம் சாா்-ஆட்சியா் சினேகா, வட்டாட்சியா் இளங்கோ ஆகியோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...